பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டுகொள்ளாதது ஏன்? தமிழ்ப்புலிகள் கட்சி ஆர்ப்பாட்டம் !
![]()
பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் அநீதி வீட்டுமனை பட்டா வழித்தட பிரச்சனைகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்டம் மாநகர காவல் துறையினரை கண்டித்து சேலம் மாவட்டம் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாநகர கோட்டை மைதானத்தில் நடைபெற்றது .
இதில் தமிழின தளபதி நாகை திருவள்ளுவன் தலைமையில் சேலம் நாமக்கல் மண்டல செயலாளர் க. உதயபிரகாஷ், முன்னிலை மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் மேட்டூர் வீரசிவா, மாநில தொழிலாளர் அணி துணைச் செயலாளர் சேலம் ப.பிரபு, மண்டல துணைச் செயலாளர் மாறன், அரசு ஊழியர் அணி மாநில துணைச் செயலாளர் ஆதிவீரன்,மாநில மாணவரணி செயலாளர் சிலம்பரசன், மாநில மாணவரணி துணை செயலாளர் கபிலன், வரவேற்புரை சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ராவண பிரபு, ஒருங்கிணைப்பாளர் குருமூர்த்தி, ஞானப்பிரகாஷ், பரமசிவம், விஜயகுமார், குரு,ராமச்சந்திரன்,தமிழ்ச்செல்வன், பிரித்திவிராஜ், அழகேசன், இளவேனில், பேரறிவாளன்,முகிலரசன், செந்தமிழன் , முத்துக்குமார், பலராமன், செல்வகுமார், மனோவள்ளுவன், அழகுமணி, விமல், ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
போராட்டத்தில் சேலம் மாவட்டத்தில் பட்டியல் இன மக்களுக்கு ஏற்படும் அநீதி வீட்டுமனை பட்டா வழித்தட பிரச்சனைகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் மற்றும் சேலம் மாவட்டம் மாநகர காவல் துறையினர் பட்டியிலின மக்கள் கொடுக்கும் புகாரின் பெயரில் நடவடிக்கை எடுக்க அலட்சியம் காட்டும் காவல்துறையை கண்டித்தும் இது போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் முன்னிறுத்தி தமிழ்ப்புலிகள் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

