மும்முனை மின்சாரம் வழங்கும் பணி..எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் ஆய்வு!
வில்லியனூர் உத்திரவாகினிப்பேட்டில் நடைபெற்றுவரும் மும்முனை மின்சாரம் வழங்கும் பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா நேரில் ஆய்வு செய்தார் !
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்திரவாகினிப்பேட், எஸ்.எஸ். நகர், அம்பேத்கர் நகர், பெரியபேட், புதுப்பேட், கரையான்பேட், திருவள்ளுவர் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குறைந்த மின்னழுத்தம் காரணமாக வீட்டு உபயோக பொருட்கள் சேதமாக உள்ளதாகவும், மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் இரா. சிவா அவர்கள் மின்துறை அதிகாரிகளிடம் பேசி உத்திரவாகினிப்பேட்டில் 200 கிலோ வாட் மின்திறன் கொண்ட மின்மாற்றியை 315 கிலோ வாட் மின் மாற்றியாக மாற்றி புதிய மின்வழித்தடம் மூலம் மும்முனை மின்சாரம் வழங்குவது என முடிவு செய்து அப்பணி கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
இப்பணியை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா நேரில் சென்று இன்று ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்கள் அதிகம் பாதிக்காத வகையில் மும்முனை மின்சாரம் வழங்கும் பணியை துரிதமாக செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதில், மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர், உதவிப் பொறியாளர் சந்திரசேகர், இளநிலைப் பொறியாளர் ஸ்டாலின், ஊழியர்கள் குமரேசன், குமரன், கோபால், பலராமன், கார்த்திகேயன், மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் வெங்கடேசன், செல்வநாதன், பழனிசாமி, தணிகாசலம், ஆற்றல் அரசு, ராமநாதன், அன்பரசன், ஆறுமுகம், திருமுருகன், சுந்தரவடிவேல் மற்றும் திமுக தொகுதி செயலாளர் மணிகண்டன், தொமுச தலைவர் அங்காளன், ஹரி கிருஷ்ணன், அபிமன்னன், காளிதாஸ், சிலம்பு, அசார், விந்தியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.