தேனி – ஆண்டிபட்டி இரயில்வே மேம்பால பணிகள்..மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் ஆய்வு!
தேனி மாவட்டம்,தேனி – ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில்
இரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருதை மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேனி மாவட்டம், மதுரை – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் (NH
49) தேனி – ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில்
இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை – கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் (NH 49)
தேனி – ஆண்டிபட்டி இரயில் நிலையங்களுக்கு இடையில் (இரயில்வே லெவல்
கிராசிங் எண் 68 பதிலாக இரயில்வே கி.மீ 72/90-7) சேதுபாரதம் திட்டத்தின்
கீழ் ரூ.92.02 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று
வருகிறது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு,
பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி மேம்பாலப் பணிகளை
துரிதமாக மேற்கொள்ளுமாறும், குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடித்து
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர
தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை
அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
இவ்வாய்வில் இளநிலை பொறியாளர் திரு.தேவநாதன் உள்ளிட்ட
பலர் உடனிருந்தனர்.