மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி.. சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!

Loading

சர்வதேச அளவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு கௌரவிப்பு விழா நடைபெற்றது.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளியில் விளையாட்டு துறையில் மாவட்ட, மாநில, தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி சாதனை படைத்த மாணவர்களை பாராட்டி கெளரவிப்பு விழா சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது.

இவ்விழாவில் சோனா கல்வி நிறுவனத்தின் தலைவர் திரு.சொ.வள்ளியப்பா, இயக்குநர் டாக்டர்.வீ.கார்த்திகேயன் மற்றும் முதல்வர்.இ.ஜே.கவிதா ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.

சோனா வள்ளியப்பா பப்ளிக் பள்ளி கல்வியுடன் இணைந்து விளையாட்டுத்துறையிலும் மாணவர்கள் மேன்மை பெற வழிவகுக்கும் முன்னோடியான கல்வி நிலையமாக திகழ்வதாகவும் மேலும் இதற்கு உறுதுனையாக இருந்த இயக்குநர் டாக்டர்.வீ.கார்த்திகேயன், முதல்வர்.இ.ஜே.கவிதா, மற்றும் ஆசிரியர்களை சோனா நிறுவனத்தின் தலைவர் திரு.வள்ளியப்பா வெகுவாக பாராட்டினார்.

இந்த நிகழ்வில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவை பள்ளியின் விளையாட்டு துறை ஆசிரியை திரு.சோனியா செலஸ்டின் மற்றும் திருமதி.கீர்த்தனா ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுத்தினர்.

0Shares