விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதியுதவி..MLA கல்யாணசுந்தரம் வழங்கினார்!
காலாப்பட்டு தொகுதி கணபதிசெட்டிக்குளம் பகுதியில் கனமழை இடி மின்னலால் உயர்கோபுர மின்விளக்கு கம்பம் சாய்ந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.P.M.L.கல்யாணசுந்தரம் அவர்களின் முயற்சியால் ரூபாய் 10 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
கடந்த 05.10.2025 அன்று இரவு பெய்த கனமழை இடி மின்னல் காரணமாக காலாப்பட்டு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கணபதி செட்டிகுளம் விநாயகர் கோவில் அருகே பழுதடைந்த நிலையில் இருந்த உயர் கோபுர மின்விளக்கு கம்பம் எதிர்பாராத விதமாக சாய்ந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
அதில் துர்வதிஷ்டமாக அதே பகுதியை சேர்ந்த சுமார் 35 வயது கொண்ட திருமதி.தயாவதி என்ற பெண்மணி விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து அறிந்த மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.P.M.L.கல்யாணசுந்தரம் அவர்கள் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு உயிரிழந்த தயாவதியின் குடும்பத்தாருக்கு மாண்புமிகு முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் இழப்பீடாக வழங்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி இழப்பீட்டு தொகையில் முதற்கட்டமாக ரூபாய் 50,000/- க்கான காசோலையை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு.P.M.L.கல்யாணசுந்தரம் அவர்கள் கிராம முக்கியஸ்தர்கள் முன்னிலையில் தயாவதி குடும்பத்தினரிடம் வழங்கினார்.