இன்றைய ராசிபலன் – 08.10.2025
இன்றைய ராசிபலன் – 08.10.2025
இன்றைய ராசிபலன்
மேஷம்
தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். நினைத்த காரியம் நிறைவேறும். மருத்துவர்கள் சாதனை படைப்பர். பணப்புழக்கம் அதிகரிக்கும். யோகாவில் மனம் நாடும். அரசு காரியங்களில் அலட்சியம் வேண்டாம். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. சுபகாரியம் நடந்தேறும். பிள்ளைகள் நன்கு படிப்பர்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
ரிஷபம்
பெண்களுக்கு திருமண முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் கனவு பலிக்கும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்கள் உதவுவர். ஆன்மீகச் சுற்றுலா சென்றுவருவீர்கள். பணவிசயங்களில் யாரையும் நம்ப வேண்டாம்.உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம் சாம்பல்
மிதுனம்
மனைவி உங்களுடைய தவறுகளை சுட்டிக் காட்டினால் கோபப்படாமல் அமைதியை கையாளவும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. வெளியூர் நண்பர்கள் உதவுவர். தொலைபேசி மூலம் மார்கெட்டிங் பிரிவினர்கள் ஆர்டர்களை பெறுவர். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிட்டும். விசா கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை
கடகம்
குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மருத்துவர்களுக்கு பதவி உயர்வுண்டு. நண்பர்களிடையே கலகலப்பான சூழல் உருவாகும். மாணவர்கள் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் கொள்வர். வெளியூர் பயணம் உண்டாகும். மனம் விசாலமாகும். உதவும் குணம் மேலோங்கும். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம் சிவப்பு
சிம்மம்
உடன் பிறந்தவர்கள் உதவுவர். புதிய நண்பர்களிடம் கவனமாக இருங்கள். உறவினர்கள் வருகை இல்லத்தில் மகிழ்ச்சியைத் தரும். அரசியலில் நாட்டம் ஏற்படும். வாகனத்திற்கு அதிக செலவு ஏற்படக்கூடும். புதிய வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தேகம் பளிச்சிடும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
கன்னி
இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் நன்மை பெரிதாக இருக்காது. இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. உடல் நலத்தில் கவனம் தேவை.
அதிர்ஷட நிறம் ஆரஞ்ச்
துலாம்
உத்யோகஸ்தர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்கும். அக்கம் பக்கத்தாரிடம் நட்பு பலப்படும். சமூக ஆர்வலர்களுக்கு மக்கள் செல்வாக்கு கூடும். கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட மனஸ்தாபம் விலகும். உறவினர்களால் நன்மை உண்டு. நண்பர்கள் ஒற்றுமையுடன் இருப்பர். உடல் வலிமை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்
விருச்சிகம்
திடீர் வாய்ப்புகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தும். நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தம் நீங்கும். பண வரவு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நன்மை உண்டாகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பர்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
தனுசு
கணவர் வீட்டார் தொல்லை நீங்கும். பெண்கள் பொறுமையை காப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் நன்மையில் முடியும். பிரபலமானவர்களால் நன்மை உண்டு. தொழிலில் சில மாற்றங்கள் செய்வீர்கள். மார்கெட்டிங் பிரிவினர்களுக்குச் சற்று அலைச்சல் கூடும். உடல் நலம் சிறக்கும்.
அதிர்ஷ்ட நிறம் நீலம்
மகரம்
நண்பர்களின் வட்டாரம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர். பிள்ளைகளை தட்டிக் கொடுப்பது நல்லது. கோபித்துக் கொண்டு சென்ற தங்கள் துணைவியாரிடம் சமரசம் செய்வது நல்லது. மாணவர்கள் விளையாட்டுப் போட்டியில் கோப்பையை பெறுவர். உடல் நலம் சிறப்படையும்.
அதிர்ஷ்ட நிறம் ரோஸ்
கும்பம்
வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களை செய்துவிடுவர்.நண்பர்களின் ஆலோசனையை ஏற்று நடப்பீர்கள். காதல் கசக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். வர வேண்டிய பணம் வசூலாகும். பிரிந்த உறவினர் உங்களை தேடிவந்து மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம் பச்சை
மீனம்
பிரிந்த தம்பதிகள் தங்கள் தவறை உணர்ந்து இணைவர். வெளியூர் மற்றும் வெளியிடங்களுக்குச் சென்று வருவர். இளைஞர்களுக்கு திருமணம் சம்பந்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். உத்யோகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். தேகத்தில் உற்சாகம் வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம் கிரே