பொதுமக்களுக்கான மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்..மாவட்ட ஆட்சித்தலைவர் ஆதித்யா செந்தில்குமார் வலியுறுத்தல்!
கடலூர் மாவட்டம் சுகாதார பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர்
திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தலைமையில் மருத்துவ வசதிகளை
மேம்படுத்துவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட சுகாதார பேரவைக்
கூட்டம் இன்று (08.10.2025) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப.,
தெரிவித்ததாவது,கிராம அளவில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் ஊராட்சிகளில் ஏற்கப்படும்
தீர்மானங்களில் கிராமப் பகுதிகளில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையம்,
துணை சுகாதார நிலையம் ஆகிய மையங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை
மேம்படுத்துதல், போதிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களை
பணியமர்த்துதல் மற்றும் மக்கட்தொகைக்கேற்ப ஆரம்ப மற்றும் துணை சுகாதார
நிலையங்கள் புதியதாக அமைத்தல் போன்ற கோரிக்கைகள் குறித்து விவாதித்து
நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது.
இந்திய சூழலில் முதன்முறையாக நடத்தப்படும் சுகாதார சபை, குடிமக்களின்
தேவைகள் கள மட்டத்திலிருந்து பெறப்பட்டு, பகுப்பாய்வு செய்யப்பட்டு, "கீழ்-மேல்
அணுகுமுறையில்" நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சுகாதார சபை சுகாதார
வழங்குநர்கள், குடிமக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு இடையிலான
உறவுகளை வலுப்படுத்தவும், பல்வேறு மட்டங்களில்(கிராமம்/தொகுதி/மாவட்டம்/மாநிலம்) சமூகங்களின் முக்கிய சுகாதார பிரச்சினைகள்
மற்றும் தேவைகளைப் பற்றி விவாதிக்கவும் ஒரு தளமாக செயல்படுகிறது.
சுகாதாரத் துறையின் அலுவலர்கள் மட்டுமன்றி, சுகாதார சபையில் கல்வி, ஊரக
வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை,
பொதுப்பணித்துறை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்ட பிற துறைகளின்
பிரதிநிதிகளும், கிராம மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும்
ஈடுபடுகின்றனர். இதனால் பொதுமக்களுக்கான மருத்துவத் தேவைகளைத் தீர்ப்பதில்
துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை மேம்படுத்தப்படுத்திடவும்,
வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் வழிவகுக்கும் என மாவட்ட
ஆட்சித்தலைவர் திரு.சிபி ஆதித்யா செந்தில்குமார் இ.ஆ.ப., தெரிவித்தார்.
கூட்டத்தில் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மணிமேகலை, மாவட்ட
சுகாதார அலுவலர் மரு.பொற்கொடி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
முதல்வர் மரு.திருப்பதி உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.