புறா வளர்க்கும் போட்டி.. வெற்றி பெற்ற புரா உரிமையாளர்களுக்கு பரிசு!
கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும் நண்பர்கள் சார்பாக நடைபெற்ற 12 ஆம் ஆண்டு புறா போட்டியில் வெற்றி பெற்ற புரா உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது,
கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும் நண்பர்கள் நடத்திய 12 ஆம் ஆண்டு புறா போட்டி பரிசளிப்பு விழா கோவை கவுண்டம்பாளையம் சுகிதா மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவை S.P. சுதன் நாயக் ராஜ் தலைமையேற்றார், அருண்குமார், மணி, ஹரி, கௌதம் முன்னிலை வகித்தனர்.
2025 ஆம் ஆண்டு சுமார் 7 போட்டிகள் நடைபெற்றது, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு முதலாம் இரண்டாம் மூன்றாம் நான்காம் பரிசாக கோப்பை, சான்றிதழ், பதக்கங்கள் வழங்கப்பட்டது.
நான்கு போட்டிகளில் வெற்றபெற்ற மணி குரூப் குழுவினர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்கள். இந்த பரிசளிப்பு விழாவில் முக்கிய நிகழ்வாக வரும் காலங்களில் அதிகப்படியான போட்டியாளர்களை ஊக்குவித்து புறாக்கலையை வளர்க்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக ரமேஷ்,கென்னடி, காட்டூர் சின்ன குட்டி, குமார், செந்தில், மணிவண்ணன், விவேக், பொன்னப்பன், ராஜாராம், ராஜேந்திரன், கமலக்கண்ணன், மகேஷ், ராஜேந்திரன், சம்பத், கார்த்தி, முரளிதரன், கோபால், கண்ணன், தர்மராஜ், லக்ஷ்மணன், வினோ, அஜித் ஸ்ரீ, ரமேஷ், தேவி, ஹரிஷ், சபரி, ரஞ்சித், வசந்த, ராஜ், இராமலிங்கம், சரண், பிரைட், ஆறுமுகம், சுரேஷ்குமார், பிரதீப், லிங்கேஷ், சித்தரேஸ், வெங்கடேஷ், அஜய், நவீன், நாராயணன், ரங்கா, திலீப், யுவராஜ், அகிலன், விஷால், சிவமணி, கோகுல், அமிதாப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்