பணியிடப் பாதுகாப்பு உறுதிசெய்..சர்கரை ஆலையை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்!

Loading

செம்மேடு ராஜஸ்ரீ சர்கரை ஆலையை கண்டித்து.தமிழக வாழ்வுரிமை கட்சி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பாலப்பாடி,பேருந்து நிலையம் சர்க்கரை ஆலையை கண்டித்து மாபெரும் கண்டன.ஆர்பாட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் செம்மேடு கிராமத்தில் இயங்கி வரும் தனியார் சர்க்கரை ஆலையை கண்டித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை சாலை பாலப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி பொருப்பாளர் நா.இராசநாயகம் மயிலம் தொகுதி பொறுப்பாளர் ஆனந்தபாபு, முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல் . மாவட்ட இணை செயலர் அசோக்சக்கரவர்த்தி, செஞ்சிஒன்றிய செயலாளர்.கோ. ராஜா . ஆகியோர் தலைமை தாங்கினர். செஞ்சி நகர செயலளார் வீடியோ சரவணன், நகர துணை செயலாளர். தேவக்குமார், பொருளர் முரளிமற்றும் கவரை கோவிந்தன்வேலு ராஜா என்கிற ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில அமைப்புக்குழு உறுப்பினர் த.ஆனந்த், மாநில கொள்கை பரப்பு அணி தலைவர் மாரிமுத்து, மாநில தொழிற்சங்க பொறுப்பாளர் பண்ருட்டி இராஜமூர்த்தி, மாநில அமைப்புக்குழு உறுப்பினர் சேகர்ஆகியோர் ஆலை நிர்வாகத்தை கண்டித்து.கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன
ராஜஸ்ரீ ஆலை நிர்வாகமே!

1.பணியிடங்களில் முறையான கண்காணிப்பு மற்றும் எச்சரிக்கை அமைப்புகளை ஏற்படுத்து.

2.பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்கு.

3.பணியிடப் பாதுகாப்பு உறுதிசெய்.

4.காற்று மாசு மற்றும் நீர் மாசு கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவு.

5.சுற்றுசூழலை மாசுபடுத்தாதே.

6.விவசாயத்தை அழிக்காதே.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares