ரோந்து பணிகளை அதிகப்படுத்துங்கள்..காவல்துறைக்கு அமைச்சர் உத்தரவு!
புதுச்சேரியில் இரவு ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் காவல் துறை தலைமையகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவயாம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:ஒவ்வொரு 15 தினங்களுக்கு ஒரு முறை தனது தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக தொடர் கொலைகள் நடைபெற்றது எனவேகுற்றங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பை தீவிரப்படுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.காவல்துறை குற்றம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது…இரவு ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.