சென்னை தி ஐ பவுண்டேசன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக கிளினிக் தொடக்கம்
*மயோபியா( குறுகிய பார்வை ) சிகிச்சைக்கு- சென்னை தி ஐ பவுண்டேசன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக கிளினிக் தொடக்கம்*
சென்னை,அக்டோ. 5 –
சென்னை வடபழனி சென்னை தி ஐ பவுண்டேஷன், கண் மருத்துவமனையில் பிரத்தியோக மயோபியா (குறுகியபார்வை)கிளினிக்தொடங் கப்பட்டது.
இந்த கிளினிக் பற்றிய சிறப்புகளை சென்னை தி ஐபவுண்டேஷன்,மருத்துவமனையின் துணைத் தலைவர் உலகநாதன், மருத்துவகண்காணிப்பாளரும்,மயோபி யாமுதன்மைமருத்துவரும்,குழந்தை கள் கண்மருத்துவர் டாக்டர் அங்கீதா பிசாலி, முதன்மைகண்பரிசோதகர் மற்றும்கண்ணாடிபிரிவு ராஜிபிநாயர்கூறுகையில் இந்த குறைபாடு 2000வது ஆண்டில்5%இருந்துதற்போது 25% மாறி உள்ளது 2050 ஆம் ஆண்டில் 50 % கடக்ககூடும்என்றநிலையில் இந்த குறைபாட்டை நிவர்த்திசெய்யபிரத்தியோகமாகஇந் தமருத்துவமனையில் கிளினிக்கை துவக்கி உள்ளோம்.
மேம்பட்ட நோய் அறிதல் கருவிகளை பயன்படுத்தி விரிவானகண்பரிசோதனை, சரி செய்ய லென்ஸ் பரிந்துரைத்தல், குறைந்த அளவிலான அட்ரோபின் சொட்டுக்கள், மயோபியா கட்டுப்பாட்டுகண்ணாடிகள்ஆர்த்தோ கெராட்டாலஜி உள்ளிட்டமயோபியாகட்டுப்பாட்டுமே லாண்மை,
வெளிப்புறசெயல்பாடு
களை ஊக்குவிக்கவும் திரை வெளிப்பாட்டை குறைக்கவும் வாழ்க்கை முறைஆலோசனை,ஒவ்வொரு குழந்தைகளின் தேவைக்குஏற்பவழக்கமான கண்காணிப்பும் பின் தொடர் திட்டம் ஆகும்.
இந்தபரிசோதனை5வயது முதல் 15 வயது வரை இலவசமாகவும்,ஆலோசனையும்வழங்கப் படுகிறது. மயோபியா கிளினிக் என்பது ஒரு சிகிச்சை மையம்மட்டுமல்ல,நீண்டகால அபாயங்களை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முயல்கிறது. குழந்தை கண் மருத்துவர்கள் மற்றும் கண் மருத்துவரின் நிபுணர் குழு, சிகிச்சையுடன் விழிப்புணர்வு மற்றும் தடுப்பு ஆகியவற்றில் கவனம்செலுத்துதல் ஆகும்.