வனவிலங்கு வார விழா..மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கிய வனத்துறை!
நீலகிரி மாவட்டம் குன்னூரில் வனத்துறை சார்பாக வனவிலங்கு வார விழாவை முன்னிட்டு குன்னூர் அறிஞர் அண்ணா பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் அக்டோபர் (2)ஆம் தேதி முதல் (8) தேதி வரை வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது இந்நிலையில் நீலகிரி மாவட்டம் குன்னூர் வனத்துறை சார்பாக குன்னூர் அறிஞர் அண்ணா மேல்நிலைப் பள்ளியில் குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையில் வனவிலங்கு வார விழா நடத்தப்பட்டது.
இதில் முன்னதாக உறுதிமொழி எடுக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக வனவிலங்குகள் இடம் இருந்து நம்மை எவ்வாறு காத்துக் கொள்வது மற்றும் வன விலங்குகளை எக்காரணத்தைக் கொண்டும் துன்புறுத்தக் கூடாது என்றும் வேட்டையாடக் கூடாது என்றும் வனங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு வனத்துறை சார்பாக எடுத்துரைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வனவர் ராஜ்குமார், முருகன்,ராமதாஸ், மற்றும் வனக்காப்பாளர்கள் வன காவலர்கள் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பள்ளி தலைமை ஆசிரியை மார்க் ரேட்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.