1300 ஆண்டுகள் பழமையான  வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோசம்

Loading

1300 ஆண்டுகள் பழமையான 
வடமதுரை விருந்தீஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோசம்
கோவை துடியலூர் அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயிலில் சுமார் 1300 வருடங்களுக்கு மேல் பழமையான கோவில் ஆகும். தற்போது இந்து சமய அறநிலைத்துறையில் உள்ள இந்த கோவிலில் புரட்டாசி சனி பிரதோஷம் விழா சிறப்பாக நடைபெற்றது.
முதலில் பெரிய நந்திக்கும் பின்னர் சிவனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதில் நந்திக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம், திருநீர் உள்ளிட்டவைகளால் அபிசேகங்கள் நடைபெற்றன. 
பின்னர் அருள்தரும் விஸ்வநாயகி அம்பிகை உடன்மர் அருள்மிகு விருந்தீஸ்வரர் சுவாமி திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது. இதில் இறைவனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் தயாநிதி குருக்கள் தலைமையில் சிவனடியார்கள் இறைவனுக்கு அபிசேக, அலங்கார பூஜைகளை செய்தனர்.
இந்த விழாவிற்கு அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் அம்சவேணி பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 இந்த பூஜையில் வடமதுரை, துடியலூர், பன்னிமடை, பழனிகவுண்டன்புதூர், பூச்சியூர், தொப்பம்பட்டி, நரசிம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையை கட்டளைதாரர்கள் தினகரன் குடும்பத்தினர் முன்னின்று நடத்தினர். மேலும் இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பிரதோஷ வழிபாட்டுக்குழு தலைவர் செல்வகுமார், ஜி.பழனிச்சாமி, ரவிச்சந்திரன், என்.பி.பாபு, தணிக்கைசெல்வம், மோகனசுந்தரம், சுரேஷ், காளிதாஸ், விஜயகுமார், கண்ணன், அருணாச்சலம், வேல்முருகன் உட்பட பலர் செய்திருந்தனர்.
மேலும் உடல், பிரம்மதாளம், சங்கு, தாரை உள்ளிட்டவைகள் வைத்து ஸ்ரீ விருந்தீஸ்வரர் கையிலாய திருக்கூட்டம் குழுவினர் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக சிறப்பாக இசை வாசித்தனர்.
0Shares