முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி..மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்!

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்3 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி ரூ.1.60 இலட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு வழங்கினார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 107 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், முன்னாள் படைவீரர் நலத்துறையின் மூலம் தொகுப்பு நிதியிலிருந்து 3 முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கான கல்வி மேம்பாட்டு நிதியுதவி ரூ.1.60 இலட்சம் பெறுவதற்கான அனுமதி ஆணைகளையும், 2025 உலக சுற்றுலா தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கும் அடையாளமாக 6 மாணவிகளுக்கு பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா , தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனிச்சாமி (நிலம்) மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares