இரத்ததான தினத்தையொட்டி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு

Loading

திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி :
திருவள்ளூர் அக் 07 : திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமை தாங்கினார்.
அதன்படி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பாக தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் அனைவரும் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.
மேலும், இரத்த தான முகாம் சிறப்பான முறையில் நடத்தி முடித்த ஏற்பாட்டாளர்கள் 84 அரசு துறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரிகள், பள்ளிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகளை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதில் முதல்வர், அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஜே.ரேவதி, குடும்ப நல துணை இயக்குநர் பி.சேகர், திருவள்ளூர் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலரும் மாவட்ட சுகாதார அலுவலருமான பி.பிரியாராஜ், திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை, செ.சோகன் ராஜ், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு பிரதிபா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் தி.சண்முகவல்லி, துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
0Shares