விபத்தில்லா வாரம்’ கடைபிடிக்கப்படவுள்ளதை பொதுமக்கள் மத்தியில்,’ரன் அண்டு வாக்’ நிகழ்ச்சி
கோவையில் நாளை முதல் ‘விபத்தில்லா வாரம்’ கடைபிடிக்கப்படவுள்ளதை பொதுமக்கள் மத்தியில், சேர்க்கும் விதமாக உயிர் அமைப்பு சார்பில் மாபெரும் ‘ரன் அண்டு வாக்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுமார் 5000க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
கோவை மாவட்ட நிர்வாகம், கோவை, மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு இயக்கமான உயிர் அமைப்பு ஆகியவை இணைந்து, கோவையின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ என்கிற பிரச்சாரத்தை அண்மையில் தொடங்கியது.
இதன் மூலம் பொதுமக்களிடையே அதிக அளவில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அக்டோபர் 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை, கோவை நகரத்தில் சாலை விபத்துகள் ஏற்படாத வாரமாக மாற்றவும் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த ‘விபத்தில்லா வாரம்’ குறித்த விழிப்புணர்வை நகரில் உருவாக்குவதற்கும் ஒரு முயற்சியாக, ‘நான் உயிர் காவலன்’ பிரச்சார ஏற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து கோவை நேரு ஸ்டேடியம் பகுதியில் ‘ ரன் அண்டு வாக்’ எனும் நிகழ்வை நடத்தினர். இந்த மாரத்தான் போட்டியானது
5 கிலோ மீட்டர் தூர ஓட்டம், 3 கிலோமீட்டர் தூர ஓட்டம், 1 கிலோமீட்டர் தூர ஓட்டம், மற்றும் 1 கிலோமீட்டர் நடை பயணம், என நான்கு பிரிவுகளாக நடைபெற்றது.
இதில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உறுப்பினர்கள், காவல்துறையினர், என்.சி.சி. மாணவர்கள், மற்றும் பொதுமக்கள் என 5000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்இதனை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர்,’ரோட்டரி சர்வதேச மாவட்டம் (த்ரி டூ ஜூரோ சிக்ஸ்) 3206ன் மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்தர், உயிர் அறக்கட்டளையின் அறங்காவலர் பாலசுந்தரம், கோவை மாவட்ட அத்தலட்டிக் சங்கத்தின் தலைவர் ஸ்ரீனிவாசன், கோவை என்சிசி குழும தலைமையகத்தில் இருந்து லெட்டினென்ட் கல்னல் தீபக் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் மற்றும் லெட்டினென்ட் கல்னல் தீபக் சக போட்டியாளர்களுடன் இணைந்து விபத்தில்லா கோவையை வலியுறுத்தி 5 கிலோமீட்டர் தூரம் ஓடினர். மேலும் சாலைப் பாதுகாப்பு விதிமுறைகள் அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் விபத்தில்லா வாரம் என்பது கோவையில் சாத்தியமாகும் என அவர்களிடம் உயிர் அமைப்பால் பகிர்ந்துகொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.