பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சி
பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 18ம் ஆண்டாக ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சி
காமராஜர் இளைஞர் பேரவை மற்றும் பாரதீயம் நண்பர்கள் குழு சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு 18ம் ஆண்டாக ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும் தையல் மெஷின் வழங்கும் நிகழ்ச்சி சேலம் புத்துமாரியம்மன் கோவில் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிர்வாகிகள் கௌதமன், ராஜா , சுகுமார், சபரிநாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தனியார் பாலிடெக்னிக் கல்லூரி என்சிசி அதிகாரி பிரபுதாஸ், எழுத்தாளர் கடற்கரை மத்த விலாச அங்கதம் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி உரையாற்றினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சீனிவாசன், கோபி, பாபு குமார், சகஸ்ரநாமம், வெங்கட்ராஜ், பன்னீர்செல்வம் , கேபிள் ராஜா, ஜெகதீசன், பூபதி உட்பட பலரும் கலந்து கொண்டனர். முன்னதாக தேசியக்கொடியை ஏற்றி வைத்து காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி நிர்வாகிகளால் மரியாதை செலுத்தப்பட்டது.