காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Loading

பழனியில் மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டும் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டும், பழனி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக, பழனி வ உ சி பேருந்து வளாகத்தில் உள்ள காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

செய்யப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் முத்து விஜயன் தலைமை வகித்தார். மண்டல தலைவர் வீரமணி, மாவட்டத் துணைத் தலைவர் முருகானந்தம், சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர் பத்மினி முருகானந்தம், மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் குப்புசாமி, ஆசிரியர் கணபதி, பச்சையாறு பழனிச்சாமி, தேவஸ்தானம் சுப்பிரமணி, அடிவாரம் நேரு, சாகுல் ஹமீது, பீட்டர், சிறுபான்மை பிரிவு முகமது அலி, தொழிலாளர் துறை மாநில அமைப்பாளர் நம்பியார், ராஜீவ் காந்தி அறக்கட்டளை பிரேம்குமார், செந்தில், முன்னாள் மாநில நிர்வாகி குணசேகரன், ஆயக்குடி செல்வம், ரயில்வே சுப்ரமணி, மண்டல துணைத் தலைவர் சேக் பரீத், சிவராஜ் மண்டல செயலாளர் வீரக்குமார், மண்டல துணைத் தலைவர் கணேசன், உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

0Shares