மணிப்பூர், அருணாச்சல பிரதேசத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்..பீதியில் மக்கள்!
மேற்கு வங்கம், மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைத்துள்ளனர்.
மணிப்பூரின் நோனி பகுதியில் இன்று அதிகாலை 2.18 மணியளவில் ரிக்டர் அளவில் 3.0 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 24.64 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 93.47 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.
இதேபோல மேற்கு வங்காளத்தின் அலிப்பூர்துவார் பகுதியில் இன்று காலை ரிக்டர் அளவில் 3.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 26.43 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 89.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக எதுவும் வெளியாகவில்லை.
மேலும், அருணாச்சல பிரதேசத்தின் பிச்சோம் பகுதியில் இன்று காலை 7.41 மணியளவில் ரிக்டர் அளவில் 3.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 27.34 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 92.51 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது .