அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி துவக்கிவைத்தார்
ஈரோடு மாவட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி அவர்கள்
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழாவினை
முன்னிட்டு, தமிழ்நாடு கதர் கிராம தொழில்கள் வாரியத்தின் சார்பில் ஈரோடு
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அண்ணல் காந்தியடிகள், அவர்களின்
திருவுருவச் சிலைக்கு கதர் மாலை அணிவித்து, கதர் விற்பனையை துவக்கிவைத்தார்.
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 157-வது பிறந்தநாள் விழாவினை
முன்னிட்டு, ஈரோடு மாவட்ட தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் மற்றும்
செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஈரோடு கச்சேரி வீதி, வட்டார
வளர்ச்சி அலுவலத்தில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவ
சிலைக்கு, கதர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி,
காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப்
படத்தினை திறந்து வைத்து மாலை அணிவித்து கதர் சிறப்புத் தள்ளுபடி
விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.கந்தசாமி இ.ஆ.ப,, அவர்கள்
இன்று (02.10.2025) துவக்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
நம் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகவும் தன்னிகரற்ற
முன்னேற்றத்திற்காகவும் தன் வாழ்க்கையினையே முழுமையாக அர்ப்பணித்த
மகாத்மாவின் நினைவுகளை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும்
அக்டோபர் மாதம் 2ம் நாள் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாள் விழா நாடு
முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.நமது இந்திய நாடு பல ஆயிரம்
கிராமங்களை உள்ளடக்கிய விவசாயிகள் அதிகம் வாழும் நாடாகும். விவசாயத்
தொழில் வருடத்தில் 6 மாதங்கள் மட்டுமே வேலைவாய்ப்பு அளிக்க வல்லது.
மீதமுள்ள நாட்களில் உள்ளூரில் கிடைக்கக் கூடிய மூலப் பொருட்களைக்
கொண்டு நூல் நூற்பு நெசவு மற்றும் சோப்பு தயாரித்தல். காலணிகள்
தயாரித்தல், தச்சு மற்றும் கொல்லு தொழில் போன்ற இன்னும் பிற கிராமத்
தொழில்களில் ஈடுபட்டு வருவாய் ஈட்டவும், குறிப்பாக கிராமப்புற
பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பு அளிக்கவும் அண்ணல் காந்தியடிகள்
அறிமுகப்படுத்தப்பட்டதே இக்கதர் கிராமத் தொழில் திட்டங்கள் ஆகும்.
ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் 2 கதர் உற்பத்தி நிலையங்கள்
மூலமாக 100 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டும் 25
நெசவாளர்களுக்கு நேரடியாகவும் சுமார் 125 நபர்களுக்கு மறைமுகமாகவும்
வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.5,000/-
முதல் ரூ.7,000/- வரை நெசவுக்கூலி பெற்று வருகின்றனர். 2024-2025ம் ஆண்டு
ரூ.25-46இலட்சம் மதிப்பிற்கு கதர் மற்றும் பாலியஸ்டர் துணிகள் உற்பத்தி
செய்யப்பட்டுள்ளது.கதர், கிராமப் பொருள் விற்பனை ஈரோடு மாவட்டத்தில்
செயல்படும் இரண்டு காதி கிராப்ட்கள் மூலம் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கு ரூ
293.00 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு ரூ. 123.07
இலட்சத்திற்கு கதர் பட்டு மற்றும் பாலியஸ்டர் இரகங்கள், சலவை சோப்புகள்,
குளியல் சோப்புகள், காலணிகள், ஊதுபத்தி கம்யூட்டர் சாம்பிராணி. கப்
சாம்பிராணி, சந்தன மாலைகள் சுகப்பிரியா வலி நிவாரணி எழில் ஷாம்பு
மற்றும் அக்மார்க் தேன் வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டை போலவே 2025 2026 ஆம்
ஆண்டிற்கு ரூ.293.00 இலட்சம் கதர் விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு
ஈரோடு கதரங்காடியில் உள்ள வாரியத்திற்கு சொந்தமான காதி கிராப்ட்களும்
அதனைச் சார்ந்து பல்வேறு இடங்களில் (அரசு அலுவலகங்களில்) கூடுதலாக
தற்போது கதர் விற்பனை நிலையங்களும் அமைத்து அனைத்து கதர் பட்டு,
பாலியஸ்டர் இரகங்களுக்கு 30% சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டு தீபாவளி
கதர் சிறப்பு விற்பனையினை துவக்கியுள்ளோம்.தீபாவளி பண்டிகையினை
முன்னிட்டு கதர் இரகங்கள் விற்பனை செய்திட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்,
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள். மருத்துவப் பணியாளர்கள்,
உள்ளாட்சி அமைப்பில் பணிபுரியும் பணியாளர்கள் ஆகியோருக்கு
இத்துறையின் மூலம் 10 சம தவணைகளில் திரும்ப செலுத்தக்கூடிய வகையில்
சுதர் துணிகள் கடனாக வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர் சிறப்புத்
தள்ளுபடி சலுகைகளை பொது மக்களும் அரசு அலுவலர்களும் பயன்படுத்தி
கொண்டு உழவுக்கு அடுத்த படியாக நெசவுத் தொழிலில் உள்ள ஏழை எளிய
கிராமப்புற மக்களுக்கு உதவிடும் பொருட்டும் அண்ணல் காந்தியடிகளின்
கனவை நனவாக்க கதர் ரகங்களை அதிக அளவில் கொள்முதல் செய்து
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திடம் வேண்டும் என
அவர் தெரிவித்தார்.
இவ்விழாவில் காதி ஆய்வாளர்கள் திரு.சுபாஷ், திரு.ஜான் ஜெயபால்,
திரு.ஜெயக்குமார் ஈரோடு வருவாய் வட்டாட்சியர் திரு. முத்துகிருஷ்ணன்
உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு-செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,ஈரோடு மாவட்டம்.