நெல்மணியில் அ மற்றும் ஓம் என்று எழுதிய குழந்தைகள்
கவுண்டம்பாளையம் அருகே ஜி.என்.மில்ஸ் பகுதியில்
லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
நெல்மணியில் அ மற்றும் ஓம் என்று எழுதிய குழந்தைகள்
கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் கணபதி ஹோமம் நடத்தி புதிதாக பள்ளியில் சேர்ந்த குழந்தைகளை பெற்றோர் மடியில் அமர்த்தி நெல்மணியில் அ மற்றும் ஓம் என்ற எழுத்துக்களை பெற்றோர் குழந்தைகளின் கைகளை பிடித்து எழுத வைத்தனர்.
நவராத்திரி பண்டிகையின் பத்தாவது நாள் விஜயதசமியாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கோவில்கள், பள்ளிகளில் வித்யாரம்பம் விழாவானது சிறப்பாக நடைபெறும்.
இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் அருகே ஜி என் மில்ஸ் பகுதியில் உள்ள லாவண்டர் மாண்டசரி பள்ளியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பள்ளி வளாகத்தில் கணபதி ஹோமம் நடத்தி புதிதாக பள்ளியில் சேரும் குழந்தைகளை பெற்றோர்கள் மடியில் அமர்த்தி அவர்களின் கைகளை பிடித்து நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தாம் அ என்ற எழுத்தையும் ஓம் என்ற எழுத்தையும் எழுத வைத்தனர்.
மேலும் பசு மற்றும் கன்றுகுட்டிகளுக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி கோமாதா பூஜை செய்தனர். தொடர்ந்து குழந்தைகள் பசுவிற்கு பழங்கள் கொடுத்தனர். இந்நிகழ்ச்சிகளில் குழந்தைகளின் பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து லாவண்டர் மாண்டசரி பள்ளியின் முதல்வரும் நிறுவனருமான மிர்நளினி கூறும்போது விஜயதசமி நாளான இன்று பெற்றோர்கள் ஆர்வமுடன் தங்கள் குழந்தைகளை பள்ளி சேர்த்து வருவதாகவும், இப்பள்ளியில் மாண்டசரி முறையில் பயிற்றுவிக்கப்படுவதாகவும் இது குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகவும் பயனுள்ள கல்வி முறையாகும், இகல்வியை 2 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பயிற்றுவிப்பதாகவும், ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தனித்தனியாக கவனம் எடுத்து பயிற்றுவிப்பதாகவும் தெரிவித்தார்.