தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்..அமைச்சர் நமச்சிவாயம் திறந்துவைத்தார்!

Loading

வி. மணவெளி அரசு தொடக்கப்பள்ளிக்குரூ. 52 லட்சம் செலவில் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு திறந்துவைத்தார்!

புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வி. மணவெளி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ. 51 லட்சத்து 80 ஆயிரம் செலவில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா இன்று மதியம் 12 மணிக்கு நடந்தது.

விழாவிற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை வகித்தார். கல்வித்துறை முதன்மை அதிகாரி முனைவர் குலசேகரன் வரவேற்று பேசினார். இயக்குநர் அமன்ஷர்மா முன்னிலை வகித்தார்.

இதில் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, புதிய பள்ளிக்கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து அமைச்சர் அவர்களும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் குத்து விளக்கேற்றி சிறப்பித்தனர்.

விழாவில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
விழா நிறைவில் பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் நன்றி கூறினார்.

0Shares