புரட்சிப்படை தளபதி இராமசாமி பண்ணாடியின் 221வது நினைவேந்தல்
புரட்சிப்படை தளபதி இராமசாமி பண்ணாடியின் 221வது நினைவேந்தல் நிகழ்ச்சி கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் நடைபெற்றது இதில், பட்டக்காரர்கள், பண்ணாடிகள் மற்றும் தேவேந்திர குல வேளாளர்கள் கலந்து கொண்டு அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்..
இந்திய விடுதலை போர் வரலாற்றில் குன்றின் மேல் விளக்காக இருக்க வேண்டிய, வீர தளபதிகள் குடத்துக்குள் விளக்காக இருந்ததை போல பல்வேறு வீரர்களின், வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. மக்கள் உள்ளத்திலே சுதந்திர உணர்வை விதைத்து அதை வளர்தெடுக்க தங்கள் உடலை உரமாகவும் இரத்தத்தை நீராகவும் தந்து புரட்சித் தீக்கான பொறியை அளித்த அந்த வீரர்களில் முக்கியமானவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் கொங்குமண்டலத்தின் புரட்சிப்படை தளபதி மாவீரர் இராமசாமி பண்ணாடியர். 1800ம் ஆண்டு முதல், முதல் 1806ம் ஆண்டு வரை நடந்த தென்னக புரட்சி மிகப்பெரும் தனித்தன்மை கொண்டது, ஆங்கிலேய ஆதிக்கத்தை தென்னகத்திலிருந்து அடியோடு அகற்ற ஒரு பெரும் புரட்சி திட்டம் வகுக்கப்பட்டு அத்திட்டத்தை திறம் பட செய்தவர் இராமசாமி பண்ணாடியார் இவரது மறைவு, மறைக்கப்பட்ட ஒரு சுதந்திர கனல் என்பதை இச்சமூகம் நினைவு கொள்ள வேண்டும் என, இன்று அவரது 211வது நினைவு தினத்தில் அவரது திருவுருவச் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், புரட்சிப் படை தளபதி இராமசாமி தேவேந்திரர் பற்றிய வரலாறுகள் நாட்டுப்புறபாடலாக நினைவு கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், மாவட்ட மாநில நிர்வாகிகள், மற்றும், சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான புஸ்பாணந்தம்,
பட்டக்காரர் பி.கே.என் பிரபுகுமார், ராதாகிருஷ்ணன் பட்டக்காரர், மாசிலாமணி, தெய்வராஜ், இந்திரன் இதழ் ஆசிரியர் உலகநாதன், சுகந்தி, சாந்தி, மற்றும் மாநில, மாவட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டு அவரது நினைவுகளை எடுத்து கூறினர் என்பது குறிப்பிடத்தக்கது.