அமைச்சரவையில் பங்கு ..காய் நகர்த்தும் கே.எஸ்.அழகிரி..செல்வப்பெருத்தகை நிலைப்பாடு என்ன?
சட்டசபை தேர்தலில் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று கேட்பது அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது, இதற்காக அரசியல் கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர், கூட்டணிக்கு கட்சிகளை சேர்ப்பது போன்ற பல்வேறு வேலைகளை அரசியல் கட்சியினர் தீவிரமாக செய்தி வருகின்றனர், அது மட்டும் இல்லாமல் திமுக அதிமுக போன்ற பல வாய்ந்த கட்சிகள் பூத் கமிட்டி நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர் .திமுக ஒரு புறம் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று தனது பணியை தொடங்கியுள்ளது. அதேபோல அதிமுக பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிக்க தங்களது வேலைகளை தொடங்கியுள்ளனர்.
இந்தநிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி 8 ஆண்டுகளாக குறைக்காத வரியை, தற்போது ஏன் குறைத்தார்கள். தேர்தலுக்காக தற்போது வரியை குறைத்துள்ளார்கள்.
கரூரில் காங்கிரஸ் கட்சி தலைவரை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தி.மு.க.வில் சேர்த்தது நாகரிகமான செயல் அல்ல. . காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை மதசார்பின்மை கொண்ட அரசியல் இயக்கமாகும். எங்களது தலைவர் ராகுல்காந்தி அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய சிறந்த நண்பர்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட கூடுதல் தொகுதிகள் கேட்பதும், அமைச்சரவையில் பங்கு வேண்டும் என்று கேட்பதும் எங்களது உரிமை. அதற்காக வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது வதந்தியாகும்.
தி.மு.க.வினர் எங்களது கூட்டணி நண்பர்கள். அதனை எடப்பாடி பழனிசாமி தி.மு.க.வின் விசுவாசி என கூறுவது தவறானதாகும். நாங்கள் 110 இடங்களில் போட்டியிட்டவர்கள். தற்போது குறைவான இடங்களில் போட்டியிடுகிறோம். அந்த நிலை மாற வேண்டும் என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.