பெண் குழந்தைகள் வைப்பு நிதி..ஆணைகளை வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் சிவா!
அரசின் பெண் குழந்தைகள் வைப்பு நிதி திட்டத்தில் வில்லியனூரில் 58 பயனாளிகளுக்கு ஆணைகளை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வழங்கினார் !
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதியில் புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை மூலம் பெண் குழந்தைகளுக்கான பொருளாதார ஆதரவு மற்றும் அதிகாரம் அளித்தல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்திருந்த 58 பயனாளிகளுக்கு இத்திட்டத்திற்கான ரூ. 50 ஆயிரம் வைப்பு நிதி ஆணை பெறப்பட்டு அதனை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி வில்லியனூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று காலை நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் குழந்தைகளுக்கான வைப்பு நிதிக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார்.
இதில், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை துணை இயக்குநர் ஜெயப்பிரியா, நல ஆய்வாளர் நாகராஜ், மற்றும் திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர்மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, செல்வநாதன், தர்மராஜ், அணி அமைப்பாளர்கள் ரமணன், குலசேகரன், தொமுச தலைவர் அங்காளன், துணைத் தலைவர் கதிரவன், துணை அமைப்பாளர்கள் சரவணன், காளி, கோபி, தொகுதி துணைச் செயலாளர் ஜெகன் மோகன், செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணி, அக்பர், ஏழுமலை, பக்ருதீன், கிளைக் கழக நிர்வாகிகள் சபரி, பரதன், சுரேஷ், தட்சிணாமூர்த்தி, சராபுதீன், சேகர், கமால்பாஷா, ராஜா முகமது, பாலு, வாசு, கோவிந்தராஜ், அன்பு, தக்ஷிணா, நடராஜன், கோதண்டம், பிரவின், லத்தீப், அபிமன்னன், காளிதாஸ், விந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.