இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் – அமைச்சர் பியூஷ் கோயல் சொல்கிறார்!

Loading

இந்தியா 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் மந்திரிபியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:-மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா வேண்டுகோளை மக்கள் மறந்தனர். ஆனால் பிரதமர் மோடி அதை மீண்டும் உயிர்ப்பித்தார்.அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவு நல்லமுறையில் சென்றுகொண்டு இருக்கிறது. இந்தியாவும், அமெரிக்காவும் நட்பு நாடுகள். இரு நாட்டு தலைவர்களும் நண்பர்கள், அனைத்து பிரச்சினைகளும் திருப்திகரமாக சரி செய்யப்படும்.

இந்தியாவுக்கு பல்வேறு சவால்கள் இருந்தபோதிலும் உலக வர்த்தகத்தில் நாடு வலுவான செயல்திறனுடன் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்தியாவின் ஏற்றுமதி சுமார் 6 சதவீதம் அதிகரிக்கும். எனவே இந்த ஆண்டையும் சிறப்பாக முடிப்போம் என்று நம்புகிறேன்.

இந்தியா 4 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தில் இருந்து 30 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. உலக நாடுகள் இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற விரும்புகிறது.

மேலும் 5.1 சதவீதம் என்ற மிக குறைந்த வேலையின்மை தரவை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். உண்மையில் எல்.அன்ட்.டி. மற்றும் ஐ.டி. நிறுவனங்களில் ஆட்கள் தேவை இருந்து வருகிறது.

தற்போது ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் உட்கட்டமைப்பை அதிகரிப்பதுடன், முதலீடு, வேலை வாய்ப்பு, வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் வளர்ச்சிக்கு மற்றொரு ஊக்கத்தை அளிக்கும். பல நாடுகள் இந்தியாவுடன் சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

0Shares