கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய மயில்..பத்திரமாக மீட்ட தீயணைப்புத் துறை!

Loading

போடிநாயக்கனூர் அருகே 160 அடி ஆழ கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய தேசிய பறவை மயில் அச்சத்தில் கிணற்று ஓரத்தில் பதுங்கி இருந்த மயிலை சுமார் ஒரு மணி நேரம் போராடி பத்திரமாக உயிருடன் மீட்டு தீயணைப்புத் துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து தேனி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஒத்த வீடு.

இங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தாஸ் என்பவருடைய தோட்டத்தில் உள்ள சுமார் 160 அடி ஆழ கிணற்றில் ஆண் மயிலும் பெண் மயிலும் சண்டை இட்டுக் கொண்டதில் நன்கு தோகை வளர்ந்த ஆண் மயில் ஒன்று கிணற்றுக்குள் விழுந்து தத்தளித்து உயிருக்கு போராடியது.

அதைக் கண்ட தோட்ட உரிமையாளர் உடனடியாக போடிநாயக்கனூர் தீயணைப்புத் துறையினருக்கு போன் செய்து தகவல் தெரிவித்து நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புத்துறை அலுவலர் குணசேகரன் தலைமையில் வீரர்கள் கிணற்றுக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிணற்று ஓர பள்ளத்தில் பதுங்கி இருந்த ஆண் மயிலை பத்திரமாக வலை மூலம் உயிருடன் மீட்டனர்.

கிணற்றுக்குள் விழுந்து அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த மயிலை ஆசுவாசப்படுத்தி வனத்துறை அலுவலர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

0Shares