22-ந்தேதி அ.தி.மு.க ஆர்ப்பாட்டம்…எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
![]()
சிவகங்கையில் மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில், மருத்துவ உயிர்க்கழிவு மறுசுழற்சி ஆலையைக் கட்டுவதற்கு தி.மு.க. அரசு எடுத்துள்ள நடவடிக்கையை கண்டித்து அ.தி.மு.க. 22-ந்தேதி (22.9.2025) காலை 10 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.இந்த திட்டத்துக்கு எதிராக மானாமதுரை நகராட்சியைச் சேர்ந்த மக்களும், சூரக்குளம் பில்லறுத்தான் ஊராட்சியைச் சேர்ந்த கிராம மக்களும் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
தற்போது ஆட்சி முடியும் தருவாயில், தி.மு.க. அரசு, இந்த ஆலையின் கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்தி வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும். இதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இந்த ஆர்ப்பாட்டம், கழக அமைப்புச் செயலாளர் ஏ.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெறும். மாவட்டம் முழுவதும் உள்ள கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சிவகங்கையில் மக்களின் உடல்நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஆலையை உடனடியாக நிறுத்த வேண்டும் என அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.மேலும் மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

