இந்தியா–அமெரிக்கா வர்த்தக விவகாரம்…பிரதமர் மோடி சொன்ன பதில்!
இந்தியா–அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள்” வர்த்தக பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் வளமான எதிர்காலம் தரும்” என நம்பிக்கை தரும் .“டிரம்ப் உடன் பேச ஆவலாக இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி கூறினார்.
ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு கூடுதல் 25% சுங்கவரி விதித்துள்ளது. இதனால் மொத்த வரி 50% ஆக உயர்ந்துள்ளது.
இதுதொடர்பாக ரஷியாவுக்கு பொருளாதார அழுத்தம் கொடுக்கவே இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்ததாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.அதில் “இந்தியா–அமெரிக்கா இயற்கையான கூட்டாளிகள்” என்று குறிப்பிட்டார்.“வர்த்தக பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் வளமான எதிர்காலம் தரும்” என நம்பிக்கை தெரிவித்தார்.“டிரம்ப் உடன் பேச ஆவலாக இருக்கிறேன்” என்று கூறினார்.
இதையடுத்து பிரதமர் மோடியின் கருத்துக்கு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்,அதில் “வரும் வாரங்களில் மோடியுடன் சந்தித்து பேசுவதை எதிர்நோக்குகிறேன்” என தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா விதித்த அதிக சுங்கவரி காரணமாக வர்த்தக உறவில் பதட்டம் ஏற்பட்டாலும், மோடி–டிரம்ப் பேச்சுவார்த்தை இருநாடுகளின் உறவை மீண்டும் வலுப்படுத்தும் என்ற நம்பிக்கை இரு தரப்பிலும் நிலவுகிறது.