தெரு நாய்களை எடுத்து வந்து விழிணர்வு.. சமூக அமைப்புகள் நடத்திய பேரணி!
![]()
அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை செலுத்தி ஆரோக்கியமான சமூகத்தை அமைக்க வலியுறுத்தி வள்ளலார் அன்பர்களும், சமூக அமைப்புகளும், இணைந்து விழிணர்வு ஊர்வலம் நடத்தினர்.
தற்போதைய பரபரப்பான மனித வாழ்வில், பொறுமை, அன்பு, சகிப்பு தன்மை குறைந்து கொண்டே வருகிறது. இதன் விளைவாக மனிதன் பாதிக்க படுவது மட்டும் இல்லாமல் அன்றாட வாழ்வில் ஏதும் அறியாத பிற உயிர்களும் சொல்ல முடியாத இன்னளுக்கு ஆளாக்கிறது.
அவைகளுக்கும் இந்த உலகில் வாழ சம உரிமை உள்ளது என்பதை வலியுறுத்தியும், மனிதனின் சுயநல வாழ்க்கை முறையால் தான் மனித விலங்கு முரண்பாடுகள் ஏற்படுகிறது. அனைத்து உயிர்களிடத்திலும் அன்பை செலுத்தி ஆரோக்கியமான ஒரு சமூகத்தை அமைக்க வலியுறுத்தி புதுச்சேரியில் அனைத்து விலங்கு நல அமைப்புகளும், விலங்கு நல ஆர்வலர்கலும், வீடு இல்லா விலங்குகளுக்கு உணவு அளிப்பவர்களும், வள்ளலார் அன்பர்களும், சமூக அமைப்புகளும், இணைந்து விழிணர்வு ஊர்வலம் நடத்தினர்.
ஊர்வலம் சுதேசி ஆலையில் இருந்து தொடங்கி கடற்கரை சாலை சென்று முடிந்தது.
ஊர்வலத்தில் விழிணர்வு நாடங்களும், விழிப்புணர்வு பதாகைகளும், எடுத்துவர பட்டது.
ஊர்வலத்தில் வந்தவர்கள், கருத்தடை செய்து தெரு நாய்களின் இன பெருக்கதை கட்டுபடுத்த வேண்டியும், தெருநாய்களாக ஆக்கப்படும் வெளிநாட்டு நாய்கள் தெருவிற்கு வருவதை தடுக்கவும், வெளிநாட்டு நாய்களை இன்னப்பெருக்கம் செய்பவர்களை கட்டுப்படுத்தவும், மாட்டின் பாலை கறந்து வியாபாரம் செய்யும் மனிதர்கள் அதை தெருவில் மேயவிடுவதையும், தடை செய்யப்பட்ட பச்சை கிளிகளை வெட்ட வெளிச்சமாக சண்டே பஜாரிலேயே விற்க படும் அவளத்தை தடுக்கவும், மாமிசம் கடையில் நடக்கும் விலங்கு வதைகளை தடுக்கவும் வலியுறுத்தி முழக்கம் செய்தனர்.
அனைத்து உயிருக்குமான வாழும் உரிமை, உணவு உரிமை, குடிநீர் உரிமை யை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.ஊர்வலத்தில் வந்த பலர் தாங்கள் தத்து எடுத்த தெரு நாய்களை எடுத்து வந்தனர். சுமார் 100 பேர் கலந்து கொண்ட ஊர்வலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

