அரசாணை 401 ரத்து செய்துவிட்டு தேர்வு முறை மூலம் பணிநியமனம் செய்யவேண்டும்..பட்டயப் பயிற்சி நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புநர்கள் வலியுறுத்தல்!

Loading

அரசாணை 401 (Weightage Mark) ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் சமூக நீதிகாக்கும் பொருட்டு எழுத்து தேர்வு முறை மூலம் பணிநியமனம் செய்திட இரண்டாண்டு (DMLT-GRADE-II) பட்டயப் பயிற்சி நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் இன்று இது தொடர்பாக இரண்டாண்டு (DMLT-GRADE-II) பட்டயப் பயிற்சி நிறைவு செய்த மருத்துவ ஆய்வக நுட்புநர்களின் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் முருகேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.அப்போது பேசிய அவர், 16.12.2014 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசானை 401 ன் படி மதிப்பெண் தரவரிசை (Weightage) முறையில் 10th STD 20%, 12th STD 30%, DMLT 50% ஐ பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்களை நிரப்ப வழிவகை செய்கிறது. இந்த வெயிட்டேஜ் மதிப்பெண் முறையில், மதிப்பெண்கள் நிலையாக இருப்பதால் முன்னேற்றம் என்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு அனுபவம் வாய்ந்த ஏராளமான ஆய்வக நுட்புநர்கள் வாழ்நாள் முழுவதும் நிராகரிக்கப்பட்டு, அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அனைவருக்கும் சம உரிமை சம வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவே அரசாணை 401 (Weightage Mark) ரத்து செய்துவிட்டு, அனைவருக்கும் சமூக நீதிகாக்கும் பொருட்டு எழுத்து தேர்வு முறை மூலம் பணிநியமனம் செய்திட தமிழக அரசிடம் பல கட்டங்களாக நேரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினோம்.தமிழக அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றாத காரணத்தினால் 15.03.2023 அன்றும், 22.10.2024 அன்றும், சென்னை எழும்பூர்

ராஜரத்தினம் மைதானம் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினோம்
10.02.2025 அன்று DME வளாகத்தில் எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினோம். அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக அரசின் முதன்மைச் செயலாளர் அவர்கள் தலைமையில் உயர்மட்ட ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்று பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.ஆனால், தமிழக அரசோ 10.07.2025 அன்று எங்களது பணியிடங்களை அடிப்படையில் எழுத்துத்தேர்வு முறையில் அறிவிக்காமல் Weightage பணியிடங்களை நிரப்ப அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையை கண்டித்து 22.07.2025 அன்று DMS வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினோம். அரசு எங்களை நேரடியாக அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனாலும் எங்களுடைய நியாயமான கோரிக்கைகள் இந்நாள்வரை நிறைவேற்றப்படவில்லை என்பது எங்கள் அனைவருக்கும் வேதனை அளிக்கிறது.இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 30000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.தற்காலிக பணியாளர்களாக பணியாற்றும் சம்பந்தப்பட்ட ஊழியர்களை எழுத்து தேர்வு மூலம் வெற்றி பெறுபவர்களை பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

0Shares