பல ஆண்டு கோரிக்கை.. அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதல் இடங்கள்..!

Loading

மதுரை அரசு செவிலியர் கல்லூரியில் கூடுதலாக 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 2025–26 கல்வியாண்டிலிருந்து இவை கலந்தாய்வு முறையில் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அதிக அளவில் வருவதால், நர்சிங் படிப்பில் இடங்களை உயர்த்த வேண்டும் என 2022-ல் அப்போதைய டீன் ரத்தினவேல், அரசு செவிலியர் கல்லூரி முதல்வர் ராஜாமணி உள்ளிட்டோர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த ஆய்வுகளின் பின்னர், தமிழ்நாடு செவிலியர் குழுமம் மற்றும் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழக சிறப்பு குழு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, சேலம், தேனி, மதுரை உள்ளிட்ட இடங்களில் அரசு செவிலியர் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 50 பி.எஸ்சி. நர்சிங் இடங்கள் மட்டுமே உள்ளன.

இதன் மூலம், மதுரையில் ஏற்கனவே இருந்த 50 இடங்களுக்கு கூடுதலாக மேலும் 50 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் தனியார் கல்லூரிகளை நாடி அதிக செலவில் படிக்க வேண்டிய அவசியம் மாணவர்களுக்கு இல்லை.கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், பேராசிரியர்கள் எண்ணிக்கைைய அதிகப்படுத்தினால், எம்.எஸ்சி. மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும். செவிலியர் சம்பந்தமான ஆராய்ச்சி படிப்பை படிப்பதற்கும் முயற்சிக்கிறோம்.

மருத்துவமனை நிர்வாகிகள் தெரிவித்ததாவது:“கூடுதல் இடங்கள் தென் மாவட்ட மாணவர்களுக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு. எதிர்காலத்தில் எம்.எஸ்சி. நர்சிங் இடங்களையும், ஆராய்ச்சி படிப்புகளையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.

 

0Shares