புதிய அப்பல்லோ பல் மருத்துவமனை..MP தமிழச்சி தங்கபாண்டியன் திறந்து வைத்தார்!

Loading

அப்பல்லோ மருத்துவமனையின் 241 வது கிளை பல் மருத்துவமனையை தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார.

மருத்துவ சேவையில் மிகவும் சிறந்து விளங்கும் பிரபல அப்பல்லோ மருத்துவமனை தனது மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. அந்த வகையில் 241 வது கிளை பல் மருத்துவமனையை சென்னை பரங்கிமலை பட்டு ரோட்டில் புதிதாக துவங்கி உள்ளது. இந்த துவக்க விழா நிகழ்ச்சியில் மருத்துவர்கள் பைவவ், தீபலட்சுமி முன்னிலையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், டெல்லி தமிழ் சங்க பொதுச் செயலாளர் முகுந்தன், டெல்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் ராம் சங்கர் ராஜா, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன் மற்றும் தொழிலதிபர்கள் கணேஷ்குமார், ராகவ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பல் மருத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியதாவது. வாக்கு திருட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்னெடுக்கும் நடைபயணம் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்று தெரிவித்தார், அதேபோல இந்த நடைபயணத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு தங்கள் ஆதரவு தெரிவித்தது மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு இது ஒரு பெரும் பலமாக அமைந்துள்ளதாக கூறினார்.

முன்னதாக பல் மருத்துவமனையை பார்வையிட்ட தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மருத்துவர் களுக்கு வாழ்த்துக்களை கூறினார். இந்த மருத்துவமனை மென்மேலும் வளர தனது வாழ்க்கையை தெரிவித்தார்.

0Shares