சர்வதேச பெண்கள் சமத்துவ தினம்!.

Loading

சர்வதேச பெண்கள் சமத்துவ தினம்!.

Women Equality Day!

ஆகஸ்ட் 26 ஆம் தேதி இன்று தான் பெண்கள் சமத்துவத்திற்கான நாள். பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்துவதாகும்.

அமெரிக்காவில் பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கிய தினத்தின் நினைவாக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

பெண்களின் சமத்துவம் என்பது கல்வி, வேலை, ஊதியம், வாய்ப்புகள், வாக்களிக்கும் உரிமை, அரசியல் என்று அனைத்திலும் ஆண்களுக்கு சமமாக பெண்களையும் நடத்துவதாகும். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பது போல் எல்லா வாய்ப்புகளிலும் சம உரிமை வேண்டும் என்று பெண்கள் தங்களுக்காக போராடத் தொடங்கினர்.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் அமெரிக்க சட்டத்தில் இருந்து மருவி எழுதப்பட்டதால் 1947 இல் இருந்தே பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கியது. 1950 இல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று நிறுவப்பட்டது.

இன்றைய கால கட்டத்தில் இந்தியாவில் பெண்கள் பெரிய அளவில் வெளியே வந்து தங்களுக்கான வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இருந்தபோதும் இன்னும் சில இடங்களில் இன்னும் சமவுரிமை வேண்டி போராடி வருகின்றனர். அதை ஊக்குவித்து சமூகத்தில் சமநிலை கொணர இந்தியாவிலும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.கல்யாணசுந்தரம் அவர்கள் பிறந்ததினம்!.

கவிஞர், மேடைப் பேச்சாளர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகத் திறன் கொண்டவரும், தமிழ்த் தென்றல் என போற்றப்பட்டவருமான திரு.வி.கல்யாணசுந்தரம் 1883ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள துள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார்.

இவர் சென்னை மகாஜன சங்கக் கூட்டத்தில் இனி எங்கும் எவரும் தமிழிலேயே பேசவேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். இவர் சென்னையில் காந்தியடிகள் ஆற்றிய உரையை அற்புதமாக மொழிபெயர்த்து காந்தியடிகளிடம் பாராட்டு பெற்றார். திலகர் தான் இவரது அரசியல் குரு.

சென்னையில் 1918-ல் முதன்முதலாக தொழிற்சங்கம் உருவானதில் இவரது பங்கு மகத்தானது. 1920-ல் நவசக்தி வார இதழைத் தொடங்கி 20 ஆண்டுகள் நடத்தினார். தன் எழுத்துகளால் தேசபக்தி கனலை மூட்டினார்.

இவர் புதிய உரைநடையின் தந்தை, மேடைப் பேச்சின் தந்தை என்றும் போற்றப்பட்டார். தமிழ்த் தென்றல், பேச்சுப் புயல், எழுத்து எரிமலை, செய்தித்தாள் சிற்பி என்றெல்லாம் புகழப்பட்டார். தமிழ்நாட்டு காந்தியாகவும், தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் தந்தையாகவும், தொழிலாளர்களுக்கு தாயாகவும் விளங்கியவர் என்று இவரைப் பாராட்டியுள்ளார் கல்கி.

இவரே தன்னுடைய பெயரை திரு.வி.க. தமிழ் என்று அழைக்கும் வண்ணம் புதுவகை நடையைத் தோற்றுவித்தார். தமிழ்ப்பணி, நாட்டுப் பணியுடன் சமயப்பணியும் ஆற்றிய திரு.வி.க. 70-வது வயதில் 1953
செப்டம்பர் 17 ஆம் தேதி அன்று
மறைந்தார்.

0Shares