புதிய மீன் மார்க்கெட்-அடிக்கல் நாட்டினார் எம்.எல்.ஏ. சரவணக்குமார்!

Loading

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் நகராட்சி சார்பில் புதிய மீன் மார்க்கெட் அமைக்கும் பணிகளுக்கு எம்.எல்.ஏ. சரவணக்குமார் அடிக்கல் நாட்டி துவக்கிவைத்தார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுளத்தில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க காய்கறி மார்க்கெட்டில் ஒரு பகுதியை மீன் விற்கும் வியாபாரிகள் உடைய நலன் கருதி அனைத்து மீன் வியாபாரிகளும் ஒன்றிணைந்து வியாபாரம் செய்வதற்கு ஏற்றார் போல அனைவரும் ஒரே இடத்தில் மீன் வியாபாரம் செய்வதற்கு பெரியகுளம் நகராட்சி முடிவு செய்தது.

அதன்படி பெரியகுளம் நகராட்சிசார்பில் கடைகள் கட்டி வாடகைக்கு விட முடிவு செய்து அதற்கான பணிகளை பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் மூலமாக தீர்மானம் நிறைவேற்று ஏற்பாடு செய்யப்பட்டது .

இதனைத் தொடர்ந்து இன்று மீன் விற்பனை செய்யும் கூடத்திற்கான கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது .இந்த விழாவில் பெரியகுளம் சட்டமன்றஉறுப்பினர்திரு.கே.எஸ்.சரவணகுமார் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியின் பொழுது பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் . மற்றும் நகராட்சி பொறியாளர் நகர் மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் . நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நகர செயலாளர் திரு.கே .முகமது இலியாஸ் . நகர் கழக துணைச் செயலாளர் மு.சேதுராமன் நகர பொருளாளர் சுந்தரபாண்டி . மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பா. கார்த்திக் , திமுகமாவட்ட பிரதிநிதிகள் ராஜபாண்டி செந்தில்குமார் . திமுக வார்டு செயலாளர்கள் மற்றும் வியாபாரிகள் என பலர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டு விழாவில் சிறப்பித்தனர்.

0Shares