நெறிப்படுத்தும் விழா..சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளருடன் கலந்துரையாடிய மாணவர்கள்!

Loading

பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களை நெறிப்படுத்தும் விழாவில் சிறப்பு விருந்தினராக சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் சிறப்பினை பற்றி எடுத்துரைத்தார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நெறிப்படுத்தும் விழாஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நெறிப்படுத்தும் விழா கல்லூரியில் நடைபெற்றது. முதலாம் ஆண்டு மாணவர்களை ஊக்கிருக்கும் விதமாக நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அப்போது முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக பேச்சாளர்கள் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தனர்,

அப்போது இந்த நெறிப்படுத்தும் விழாவுக்கு நிர்வாக தலைவர் டாக்டர் மோகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் பிரசன்ன வெங்கடேசன், ரேணுகா மோகன், சுதா மீனாட்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் முனைவர் அருள்குமார் விழாவினை துவக்கி வைத்து வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக சர்வதேச ஊக்கமளிக்கும் பேச்சாளர் டாக்டர் ஜெகன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஒழுக்கத்தின் சிறப்பினை பற்றியும், தொழில்நுட்ப ரீதியாக எதிர்காலத்தில் தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டின் அவசியம் பற்றி விளக்கி பேசினார் .முன்னதாக விழாவில் விவசாயிகள், மாணவர்களின் தாத்தா, பாட்டிமார்கள், பெற்றோர்கள் குத்துவிளக்கு ஏற்றினர் .முதலாம் ஆண்டு துறை தலைவர் முனைவர் பிரமிளா நன்றி உரையாற்றினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மேலாளர் நாகேந்திரன் மற்றும் துறைத் தலைவர்கள் ,பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

0Shares