நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டிய சிறுவன்..கடைசியில் என்ன நடந்தது தெரியுமா?
வழக்கம் போல் நீ பேசவில்லை என்றால் உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்’ என்று மாணவியை மிரட்டியதோடு `உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி அங்குள்ள பகுதியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவியும் , கேட்டரிங் கல்லுரியில் 2-ம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவர் ஒருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அந்த மாணவன் கடந்த ஆண்டு தனது நண்பன் வீட்டிற்கு அந்த சிறுமியை வரவழைத்து சிறுமியின் சம்மதத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அப்போது மாணவியின் ஆடையை கலைந்து தனது செல்போனில் நிர்வாண வீடியோ எடுத்து வைத்து கொண்டதாகவும், அதன் பிறகு இருவரும் காதலை தொடர்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த மாணவியின் வீட்டிற்கு மாணவனுடன் பழகும் விவரம் தெரியவந்தது.இதையடுத்து மாணவி, மாணவனுடன் பேசுவதை நிறுத்தி உள்ளார்.இதனால் கோபமடைந்த அந்த மாணவன் , மாணவியை நேரில் சந்தித்து, `வழக்கம் போல் நீ பேசவில்லை என்றால் உனது நிர்வாண வீடியோவை வெளியிடுவேன்’ என்று மிரட்டியதோடு `உன்னையும் உனது தந்தையையும் கொலை செய்து விடுவேன்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அந்த மாணவி திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த மாணவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.