இன்றைய ராசிபலன் – 15.08.2025

Loading

ராசிபலன்:-
மேஷம்

பெண்களுக்கு இனிமையான சம்பவம் உண்டாகும். தொழிலில் புதிய திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் செய்யலாம். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். காரியம் ஒன்று எளிதில் முடியும்.பெற்றோர் தங்கள் நிலையை அறிந்து ஒத்துழைப்பர். தேகம் பளிச்சிடும்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

ரிஷபம்

நண்பர்கள் உங்களிடம் தங்கள் சொந்தமாக நினைத்து நட்பு பாராட்டுவர்.இளைஞர்கள் தங்கள் குடும்ப பொறுப்பினை உணர்ந்து நடப்பீர். மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு அதிக அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதிக இன்சன்டிவ் கிட்டும். தம்பதிகளிடையே அன்யோன்யம் ஏற்படும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா

மிதுனம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். மாணவர்கள் தற்போதிலிருந்தே சேமிக்கும் பழக்கத்தை கடைபிடிப்பர். பெண்கள் சிக்கனமாக இருப்பர். சேமிப்பை துவங்குவீர்கள். உடன்பிறப்புகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். மனம் அமைதியைத் தேடும்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கடகம்

பெரியவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் தரதவறாதீர்கள். அவர்களின் நட்பு அனுபவத்தை கூட்டும்.பழைய கடன் ஒன்றை அடைத்துவிடுவர். நண்பர்களிடையே புரிதல் அதிகரிக்கும். பிரிந்த நண்பர்கள் மீண்டும் இணைவர். இளைஞர்களுக்கு நேர்முகத் தேர்வில் வெற்றிபெறுவர்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்

சிம்மம்

பெண்கள் ஆடம்பர செலவை தவிர்த்து சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் தங்கள் மேலதிகாரிகளின் ஆணையை ஏற்று நடப்பீர்கள். அவர்களால் நிச்சயம் நன்மை விளையும். குடும்பத்தில் வாக்குவாதம் வேண்டாம். விட்டுக் கொடுப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

கன்னி

தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

துலாம்

நீண்ட நாள் பிரச்சினைகள் தீரும். இளைஞர்களுக்கு வேலைக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் உங்களுக்கு நன்மை தரும்.நண்பர்களின் விசேஷமான பிறந்தநாள் போன்ற நிகழ்வுகளில் பங்கேற்கலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம் நீலம்

விருச்சிகம்

இன்று விளையாட்டில் வெற்றி தொடரும். எதிர்பார்த்த காரியம் வெற்றியடையும். நண்பர்களின் மத்தியில் மரியாதை கூடும். உங்கள் முயற்சிகள் வெற்றியடையும். புதிய திட்டங்கள் தொடங்க உகந்த நாள். குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். உடல் நலத்தை கவனிக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

தனுசு

வெளிநாடு சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதியாளர்களுக்கு அதிக லாபங்கள் கிடைக்கும். கலைஞர்களுக்கு தங்கள் விடாமுயற்சியும் பொறுமையும் இருப்பதால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தேகப் பொலிவும் உற்சாகமும் மிகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்ச்

மகரம்

குடும்பத் தலைவிகள் பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. கணவன் மனைவிக்குள் இருந்த சந்தேகம் விலகும். தங்கள் சேமிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டிகளை பொடியாக்குவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

கும்பம்

தொழிலில் லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை சுமாராக இருக்கும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் சேர்வார்கள். பணவரவு சீராக இருக்கும்; கடன் சுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் தங்கள் முயற்சியில் வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: கிரே

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு கடன் பைசலாகும். மருத்துவர்கள் சாதனைப் படைப்பர். நண்பர்கள் விசயத்தில் விட்டுக் கொடுங்கள். மாணவர்கள் கூடா நட்பை விலக்குவர். மூத்த சகோதரரால் நன்மை விளையும். தம்பதியர்கள் ஒற்றுமையுடன் இருப்பர்.

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு

0Shares