தியாகிகள் ஓய்வூதியம் ரூ.22,000 ஆக உயர்வு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Loading

நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னையில் கோட்டை கொத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை மரியாதையை ஏற்றார்.

இதைத்தொடர்ந்து கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

* விடுதலை காற்றை சுவாசிக்க காரணமான தியாகிகளை போற்றுவோம்.

* சுதந்திர தினத்தில் முதலமைச்சர்கள் தேசிய கொடி ஏற்றும் உரிமையை பெற்று தந்தவர் கலைஞர்.

* 5-வது ஆண்டாக தேசிய கொடியை ஏற்றி வைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளேன்.

* 5-வது முறையாக தேசியக்கொடியை ஏற்றிவைக்க வாய்ப்பளித்த தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

* அனைவருக்குமான நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நமது தலைவர்கள் கனவு கண்டனர்.

* சுதந்திர போராட்டத்தில் தமிழகர்கள் பங்கு அளப்பரியது.

* அனைத்து தேசிய இன மக்களும் போராடி பெற்றதே இந்த சுதந்திரம்.

* தமிழ்நாட்டில் தியாகிகளுக்கு மணி மண்டபங்கள் அமைத்தது தி.மு.க. ஆட்சி.

* விடுதலை போராட்ட தியாகிளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 22,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* விடுதலை போராட்ட தியாகிகளுக்கான மாதாந்திர குடும்ப ஓய்வூதியம் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

* 2-ம் உலகப்போரில் பங்கேற்ற முன்னாள் படைவீரர்களுக்கு வழங்கப்படும் ஆயுட்கால நிதியுதவி ரூ.15,000 ஆக உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

0Shares