79-வது சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

Loading

இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை பிரதமர் ஏற்றி வைத்தார். 21 குண்டுகள் முழங்க பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றினார்.

செங்கோட்டையில் குழுமியிருக்கும் மத்திய, மாநில அமைச்சர்கள், ராணுவ உயர் அதிகாரிகள், பொதுமக்கள் தேசியக்கொடிக்கு மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டையில் ஏற்றப்பட்ட தேசியக்கொடிக்கு ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஆபரேஷன் சிந்தூர் என எழுதப்பட்ட கொடியுடன் பறந்த ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு பூக்கள் தூவப்பட்டன.

0Shares