கொங்கணாபுரம் ஒன்றியத்தில் உங்களிடம் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம்!

Loading

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் தெற்கு ஒன்றியத்துக்குட்பட்ட கட்சுப்பள்ளி சுய உதவி குழு கட்டிடத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி,தெற்கு ஒன்றிய செயலாளர், அட்மா சிறப்பு குழு தலைவர், எடப்பாடி வட்டாட்சியர் வைத்தியலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோ, முன்னாள் ஊராட்சி மன்றதலைவர் முத்துராமன், செல்வகுமார்,மெடிக்கல் குமார்,பொன்னுசாமி செல்வம்,பழனிசாமி, பிரபு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து 16 துறைகள் சார்ந்த மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அரசுத் துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.

0Shares