நாட்டை துண்டாடி விட்டது காங்கிரஸ்- அமித்ஷா கடும் தாக்கு!

Loading

காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது. அன்னை இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் ஆகும் என மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.

நாளை நாடு முழுவதும் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது, இதை ஒட்டி டெல்லியில் பிரதமர் மோடி மூவர்ண கொடியை ஏற்றி வைத்து மக்களிடையே உரையாற்றுகிறார் ,இதே போல் தமிழகத்திலும் பல்வேறு மாநிலங்களிலும் முதலமைச்சர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பினை ஏற்பர்.

இந்தநிலையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு நாட்டு மக்களுக்கு இன்று இரவு 7 மணியளவில் உரையாற்ற உள்ளார். அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் சேனல்களில் அவரது உரை ஒலி-ஒளிபரப்பு செய்யப்படும்.மேலும் இன்று (வியாழக்கிழமை) பிரிவினை கொடுமைகள் நினைவுதினம் கடைபிடிக்கப்படுகிறது.

1947-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தியாவிடம் இருந்து பாகிஸ்தான் தனியாக பிரிந்து சென்றதை ஆகஸ்டு 14-ந்தேதி நினைவு தினம் கடைபிடிப்பதை மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டு முதல் கடைபிடித்து வருகிறது.

இன்று பிரிவினை கொடுமைகள் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஒருபதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியா பிரிக்கப்பட்டது மிகப்பெரிய கொடூரம் ஆகும். இதற்கெல்லாம் காரணம் காங்கிரஸ்தான்.
அன்றைய தினம் காங்கிரஸ் நாட்டை பல துண்டுகளாக துண்டாக்கிவிட்டது. அன்னை இந்தியாவின் மகிழ்மையை காங்கிரஸ் கட்சி காயப்படுத்திய தினம் ஆகும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியர்கள் இந்த வரலாற்றுக் கொடூரத்தை ஒரு நாளும் மறக்கமாட்டார்கள். பிரிவினையால் ஏற்பட்ட துன்பம் மறக்க முடியாதது.இவ்வாறு அமித்ஷா அந்த பதிவில் கூறியுள்ளார்.

0Shares