திமுகவில் இணைந்ததால் மைத்ரேயன் அதிமுகவில் இருந்து நீக்கம்!

Loading

அதிமுக முன்னாள் மாநிலங்களவை எம்.பி. அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதிமுக முன்னாள் மாநிலங்களவை எம்.பி. மற்றும் பிரபல புற்றுநோய் நிபுணர் டாக்டர் வி. மைத்ரேயன், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டு, நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

மைத்ரேயன் 1991-ல் பாஜகவில் இணைந்து 1999 வரை செயல்பட்டார். பின்னர் ஜெயலலிதா தலைமையில் அதிமுகவில் சேர்ந்தார். 2002-ல் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட அவர், தொடர்ந்து மூன்று முறை பதவி வகித்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்ததற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அவரின் ஆதரவாளராக இருந்தார்.

2023 ஜூனில் மீண்டும் பாஜகவில் சேர்ந்த அவர், 2024 செப்டம்பரில் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் திரும்பினார். இப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைந்ததை எதிர்த்து திமுகவில் இணைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு, மைத்ரேயன் கட்சியின் கொள்கை, ஒழுங்குமுறைக்கு முரணான செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கினார். மேலும், கட்சியினருக்கு அவருடன் தொடர்பு கொள்ள வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

0Shares