மதுரை மாநகராட்சி வரி முறைகேடு – கணவர் கைது, மேயர் ராஜினாமா?
மதுரை மாநகராட்சி வரி முறைகேடு தொடர்பாக மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக, மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் நேற்று இரவு சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் இதற்கு முன் பில் கலெக்டர், வருவாய் உதவியாளர், முன்னாள் உதவி கமிஷனர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டு, பலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், 7 பேர் ராஜினாமா செய்தனர். ஐகோர்ட்டு உத்தரவின்படி ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
பொன்வசந்த், கைது செய்யப்பட்ட பிறகு அதிக இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் காரணமாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணையில், மேயர் கணவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், முன்னாள் உதவி கமிஷனர் உள்ளிட்டோர் பெயர்கள் வெளிப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத்தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவருவதால் பலர் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது.போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதால், இன்னும் பலர் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது.