ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு.. தமிழக அரசை சாடிய இந்திய சுயராஜ்ஜிய கட்சி!

Loading

தூய்மை பணியாளர்கள் போராட்டம் தமிழக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு தடவுவது போல் உள்ளதாக இந்திய சுயராஜ் கட்சியின் நிறுவனரும் தலைவருமான ராம் குமார் விமர்சனம் செய்து உள்ளார்.

சென்னை மாநகராட்சி முன்பு நடைபெற்று வரும் தூய்மை பணியாளர்களின் போராட்டத்திற்கு இந்திய சுயராஜ்ய கட்சியின் நிறுவனரும் தலைவர் ஆன திரு ராம்குமார் அவர்கள் நேரில் சந்தித்து போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்:தூய்மை பணியாளர் போராட்டம் தமிழக அரசு ஒரு கண்ணில் வெண்ணெய் ஒரு கண்ணில் சுண்ணாம்பு சென்னை தூய்மை பணியாளர் போராட்டம் கடந்து 11 நாட்களாக நடைபெற்று வருகிறது, தூய்மை பணியாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான போராட்டமாக இதயம் முன்னெடுத்து செல்கின்றனர். 23 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து ஒருவர் 17,000 சம்பளத்தில் தள்ளப்பட்டால் எப்படி அவர் வேலை பார்க்க முடியும் ,

பணி நிரந்தரம் எவ்வாறு கிடைக்கும் தூய்மை பணியாளர் பணிகள் முழுமையாக அரசாங்கத்திலிருந்து தனியாருக்கு டெண்டர் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது, அரசாங்கத்திடமிருந்து தூய்மை பணியாளர்களுக்கு தனியார் மூலம் 17,000 சம்பளம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, ஏழை பாமர மக்கள் தொழிலாளி இடமிருந்து சுரண்டப்பட்டு அரசியல்வாதி உயர்மட்ட அதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகள் வரை எல்லோருக்கும் பங்கு பிரித்துக் கொடுத்து கமிஷன் வகையில் பெறப்படுகின்ற திட்டம் தான் இது,

ஏழைகளுக்கான அரசாக செயல்படுவதாக கூறிக்கொண்டு ஏழை மக்கள் வாழ்வாதார அடிமடியிலே கை வைப்பது அநியாயமானது ,17,000 சம்பளத்தில் பணியாளர்கள் வாழ முடியுமா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் இந்த அரசாங்கம் யாருக்கான அரசாக செயல்படுகிறது யாருக்காக இவர்கள் விசுவாசமாக இருக்கிறார்கள் பொய்யாக சொல்லி ஆட்சியில் வந்தவுடன் பொய்யை மட்டும் நிரூபிக்கின்றனர்,

பத்தாவது நாட்களாக ஒரு பணியாளர் கூட்டம் போராட்டம் நடத்துகிறது என்றால் அரசாங்கத்தின் கையாளாகாத செயல் அல்லது திருட்டுத்தனம் அல்லது மோசடி என்பது அதில் தவிர வேறு என்ன என்று கேள்வி எழுப்பினார் தூய்மை பணியாளர் போராட்டத்தை அதன் பேச்சுவார்த்தையை அடிப்படை கோரிக்க நிறைவேற்றி இருந்தால் இந்தப் போராட்டம் ஓய்ந்திருக்கும்.

மேயர் பிரியா கூறுவது முதலில் ஊழியர் வேலைக்கு செல்ல வேண்டும் என்பது இது மிகப் பெரிய பித்தலாட்டமானது பிரச்சனையை சரி செய்யாமல் ஊழியர்கள் எப்படி வேலைக்கு திரும்ப முடியும் இது அடிப்படையில் அறிவு அடிப்படையில் முதல் நாள் போராட்டத்திலே அவர்களின் கோரிக்கையை ஏற்று தீர்த்து வைக்கக்கூடிய ஒரு அடிப்படை செயலை இவ்வளவு நாள் போராட்டத்தை அரசாங்கம் இழுத்து மிகப்பெரிய அயோக்கியத்தனமான செயல் என்று கூறியுள்ளார்.

எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்து விட்டால் அரசாங்கத்திற்கு என்னதான் வேலை மக்களில் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள் மறந்து விடாதீர்கள் தூய்மை பணியாளர்கள் போராட்டம் வெல்க வெற்றி பெருக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடு என தனது அறிக்கையில் இந்திய சுயராஜ் கட்சியின் நிறுவனம் தலைவருமான ராம்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,

0Shares