உடலியல் நிபுணர் திரு.வால்டர் ருடால்ஃப் ஹெஸ் அவர்கள் நினைவு தினம்!.

Loading

ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியை உருவாக்கியஉடலியல் நிபுணர் திரு.வால்டர் ருடால்ஃப் ஹெஸ் அவர்கள் நினைவு தினம்!.

மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற வால்டர் ருடால்ஃப் ஹெஸ் (Walter Rudolf Hess) 1881ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி சுவிட்சர்லாந்தில் பிறந்தார்.

இவர் 1906ஆம் ஆண்டு மருத்துவத்தில் பட்டம் பெற்ற பிறகு, அறுவைசிகிச்சை நிபுணராகப் பயிற்சி பெற்றார். ரத்தத்தின் பிசுபிசுப்புத் தன்மையை அளப்பதற்காக விஸ்கோசிமீட்டர் என்ற கருவியை உருவாக்கினார்.

மேலும், இவர் விழி விலகலின் அளவுகளைக் கண்டறிய உதவும் ஹெஸ் திரையை உருவாக்கினார். 1912ஆம் ஆண்டு கண் மருத்துவர் பணியை விட்டுவிட்டு ஜஸ்டஸ் காலே என்ற விஞ்ஞானியுடன் இணைந்து உடலியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

இவர் 1930களின் ஆரம்பத்தில் உள்ளுறுப்புகளை கட்டுப்படுத்தும் நடுமூளைப் பகுதியின் செயல்பாடு குறித்து பூனைகளைப் பயன்படுத்தி ஆராயத் தொடங்கினார். அது நியூரோ செக்ரியேஷன் (நரம்பு மண்டல கசிவுகள்) குறித்தப் புரிதல்களுக்கான முக்கிய கண்டுபிடிப்பாக திகழ்ந்தது.

இந்த கண்டுபிடிப்புக்காக இவர் 1949ஆம் ஆண்டு எகாஸ் மோனிஸ் என்பவருடன் இணைந்து மருத்துவம் மற்றும் உடலியலுக்கான நோபல் பரிசை வென்றார். உடலியல் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அந்த துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய வால்டர் ருடால்ஃப் ஹெஸ் தனது 92வது வயதில் 1973 ஆகஸ்ட் 12 ஆம் தேதி அன்று மறைந்தார்.

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை திரு.விக்கிரம் சாராபாய் அவர்கள் பிறந்ததினம்!.

இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை விக்கிரம் ஆம்பாலால் சாராபாய் 1919ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்தார்.

சிறுவயதிலிருந்தே கணிதத்திலும், இயற்பியலிலும் அதிக நாட்டம் கொண்டவராக இருந்தார். இங்கிலாந்தில் பிஹெச்.டி. ஆராய்ச்சியை முடித்த பிறகு 1947ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அகமதாபாத்தில் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவினார்.

இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார். 1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோளான ஆரியபட்டாவின் விண்ணேவுதலுக்கு முழுமுதல் காரணமானவர் இவரே. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, பத்மபூஷண், பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) ஆகிய விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டுக்காக கடுமையாக பாடுபட்ட விக்ரம் சாராபாய் 52-வது வயதில் 1971 டிசம்பர் 30 ஆம் தேதி அன்று மறைந்தார்.

0Shares