ராகுல் காந்தி குற்றச்சாட்டை விமர்சித்த மந்திரி ராஜினாமா!
ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மந்திரி ராஜண்ணா விமர்சித்த சம்பவம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து,தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரத்தையும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போலி வாக்காளர்கள் வாக்களித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார். மத்திய பெங்களூரு மகாதேவ்புராவில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்குகள் பதிவானதாக அவர் கூறினார்.பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுயியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டை விமர்சித்த கர்நாடக மாநில கூட்டுறவு மந்திரி ராஜண்ணா, “வாக்காளர் பட்டியல் எங்கள் ஆட்சிக்காலத்திலேயே தயாரானது; அப்போது நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை; குளறுபடிகள் நடந்தது உண்மை” என்று கூறினார்.வாக்கு திருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மந்திரி ராஜண்ணா விமர்சித்த சம்பவம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ராஜண்ணா முதல்-மந்திரி சித்தராமையாவை இன்று சந்தித்தார்.
இந்த பேச்சு கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்த, ராஜண்ணா இன்று முதல்வர் சித்தராமையாவிடம் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.