போதை விழிப்புணர்வு பேரணி..உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாணவ மாணவிகள்!

Loading

வெலிங்டன் காவல் துறையினர் சார்பில் பேரக்ஸ் பகுதியில் போதை விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் நலன் கருதி போதை பழக்கத்தில் இருந்தும் சமூக விரோதிகளிடமிருந்தும்,தங்களை பாதுகாத்து கொள்ளவும் சமுதாயத்தில் நல்ல நிலையுடன் வாழவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக காவல் துறையினரால் பொது இடங்கள் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பல்வேறு விதமாக விழிப்புணர்வினை பல்வேறு வகைகளில் கொடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கும், மாணவ, மாணவிகளுக்கும், வெலிங்டன் காவல் துறையினரால் முதலில் போதைகளால் ஏற்படும் விளைவுகளை குறித்து அறிவுறுத்தப்பட்டது.

வெலிங்டன் கண்டோண்மென்ட் பள்ளி,ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளி,ஹோலி
இன்னசன்ட் பள்ளி, ஆகிய பள்ளிகளில் உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டு போதை விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்ட பிறகு பதாதைகளை ஏந்தியும், போதைகளால் ஏற்படும் விளைவுகளை குறித்தும் கோஷமிட்டும் பொது மக்களுக்கு விழிப்புணர்வுகொடுத்தனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் குன்னூர் அனைத்து மகளிர்காவல் நிலைய ஆய்வாளர் கவிதா ,வெலிங்டன் காவல் நிலைய உதவிஆய்வாளர் ஷேக்சலீம், வெலிங்டன் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் லலிதா, குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் நித்தியா,கிராம நிர்வாக அலுவலர் பிரவீனா, மற்றும் கண்டோன்மெண்ட் முன்னாள் துணை தலைவர் வினோத்குமார் மற்றும் வெலிங்டன் காவல் துறையினர் ஆசிரியர்கள் மாணவ. மாணவிகள் கலந்து கொண்டனர்.

0Shares