148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு மானிய மண்ணெண்ணெய்.. அமைச்சர்கள் வழங்கினர்!
தூத்துக்குடி மாவட்டத்தில் 148 பாரம்பரிய நாட்டுப்பாடகுகளுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதாஜீவன் வழங்கினார்கள்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 3816 மீன்பிடி நாட்டு படகுகளில் 1685 பாடல்கள் விற்பனை வரி விளக்கு அளிக்கப்பட்ட மானிய எரிஎண்ணெய் பயன்படுத்தியும் மற்றும் 1320 மீன்பிடி படங்களில் மீனவர்கள் தமிழ்நாடு அரசின் மானிய தொழிலக மண்ணெண்ணெய் யினை கொண்டு மீன்பிடித் தொழில் புரிந்து வருகின்றனர் ,
இதனில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 8 23 அன்று நடைபெற்ற மீனவர்கள் காண சிறப்பு மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருடத்திற்கு 3400 லிட்டராக இருந்த மானிய தொழிலக மன்னனையை வருடத்திற்கு 3,700 லிட்டர் என உயர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
தற்பொழுது தூத்துக்குடி மாவட்டத்திற்கு கூடுதலாக 148 பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசின் மானிய தொழிலக மன்னனை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் 2023 24 ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளின் படி கடற்பகுதியில் மீன் பிடி தொழில் ஈடுபடும் நாட்டுப் படகு மீனவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ரூபாய் 450 கோடி திட்ட மதிப்பீட்டில் 75% மாநிலத்தில் முதல் கட்டமாக 10,000 இயந்திரம் கொடுக்கப்பட்ட நாட்டு படங்களுக்கு உயிர் காப்பு சட்டைகள் லைஃப் ஜாக்கெட் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
உயிர் காப்பு சட்டை அலகு ஒன்றின் விலை ரூபாய் 2400 என நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான அரசின் அதிகபட்சம் 75% மானியத் தொகை 1554 மற்றும் பயனாளியின் இறுதி சதவீத பங்களிப்புத் தொகை ரூபாய் 618 என்று நெறிமுறைகளின் படி வழங்கிட ஆணை பெறப்பப்பட்டுள்ளது .
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு 2000 நாட்டு படங்களுக்கு 6199 உயிர் பாதுகாப்பு சட்டைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு முதல் கட்டமாக ரூபாய் 39 லட்சம் மானிய செலவினத்தில் 2014 எண்ணிக்கையில் நீர்காப்பு சட்டையில் பெறப்பட்டுள்ளது .
தூத்துக்குடி ஒருங்கிணைந்த மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு கால்நடை பராமரிப்பு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் 148 பாரம்பரிய நாட்டுப்பாடல்களுக்கு புதியதாக தொழிலக மானிய மண்ணெண்ணெய் பெரும் அட்டை மற்றும் உயிர்காப்பு சட்டைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான் மேயர் ஜெகன் பெரியசாமி துணை மேயர் ஜெனிட்டா, மண்டல மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குனர் சந்திரா உதவி இயக்குனர் மீன்பிடித் துறைமுக மேலாண்மை ஜனார்த்தனன் மற்றும் உதவி இயக்குனர் புஷ்ரா ஷப்னம், மண்டல தலைவர் நிர்மல்ராஜ், மாநில மீனவர் நல வாரிய உறுப்பினர்கள் அந்தோணி ஸ்டாலின், ஜெபமாலை, திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் உமரி சங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பை.மூ.ராமஜெயம், எஸ்.ஜே.ஜெகன், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் கவிதா தேவி, வட்ட செயலாளர்கள் டென்சிங், ரவிச்சந்திரன், பொறுப்பாளர் மரிய ஆன்ஸ், வட்ட பிரதிநிதிகள் மார்ஷல், ஆறுமுகம், மாவட்ட மருத்துவர் அணி தலைவர் அருண்குமார், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலஸ் மணி, தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபு, அந்தோணி கண்ணன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ், மகேஸ்வரி,ஆகியோர் உடனிருந்தனர்.