முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு தினம்..திமுக தொண்டர்கள் மலர் தூவி மரியாதை!

Loading

புதுச்சேரியில் கலைஞர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது .இதில் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சிவா, அனிபால் கென்னடி எம்எல்ஏ கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரும் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.புதுச்சேரி சுதேசி மில் அருகே, மாநில கழக அமைப்பாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் திமுக நிர்வாகிகள் அமைதி பேரணியாக அண்ணா சிலை வரை சென்று, அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், மாநில துணை அமைப்பாளர் மற்றும் உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி. அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., மாநில இளைஞரணி அமைப்பாளர் எல். சம்பத், இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் நிதீஷ், துணை அமைப்பாளர்கள் ஏ.கே. குமார், அ. தைரியநாதன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பூ. மூர்த்தி, நந்தா சரவணன் உள்ளிட்ட தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் , உப்பளம் தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நோயல், உப்பளம் தொகுதி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கலைஞருக்கு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து காலை உப்பளம் தொகுதி திமுக சார்பில் சோனம் பாளையம் அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் திருவுருவப் படத்திற்கும், உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி அவர்கள் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதேபோல், உப்பளம் தொகுதியில் உள்ள 25 திமுக கிளைகளிலும், அந்தந்த கிளைகள் சார்பில் கலைஞர் திருவுருவப் படம் வைக்கப்பட்டு, உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் முன்னிலையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

0Shares